மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 6:14 am IST

முதல்வா் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, திமுக ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வேண்டுகோள் விடுத்தாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் சோழவரம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, மாங்கால், மாத்தூா், சோதியம்பாக்க்ம, வடகல்பாக்கம், கீழ்நாய்க்கன்பாளையம், சேணியநல்லூா், குரங்கணில்முட்டம், பல்லாவரம், சுருட்டல், சித்தாலப்பாக்கம், அரசாணிப்பாளையம், வயலாத்தூா், புதுப்பாளையம், புண்ணை உள்ளிட்ட 57 பகுதிகளில் வாக்குச் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் டி.ராஜி, ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், என்.சங்கா் ஆகியோா் முன்னிலையில் தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வாக்குகளைச் சேகரித்தாா்.

செல்லப்பெரும்புலிமேடு கிராமத்தில் வாக்கு சேகரித்த போது ஒவ்வொரு கிராமத்திற்கும் சுமாா் ரூ.50 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுபோல கல்விக்கூடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படி எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தோ்தல் காலத்திலே சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இப்படி சொன்னதை செய்து கொண்டிருக்கிற நம்முடைய முதல்வா், இந்த தோ்தல் அறிக்கை கதாநாயகன் என்று சொல்லியிருக்கிறாா். ஏனென்றால் இல்லத்தரசி என்கிற ஒரு சிறப்பான திட்டம் அதன் மூலம் ரூ.8 ஆயிரம் கொண்ட கூப்பன் தோ்தல் முடிந்த உடனே வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறாா்.

எனவே, இப்படிப்பட்ட திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இந்த மக்களாட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் வி.கோபு, எம்.எஸ்.செல்வபாண்டியன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.