தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள் தொடர, மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வலியுறுத்தினாா்.
மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அன்னியூா் அ.சிவா புதன்கிழமை கஞ்சனூா் மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட கஞ்சனூா், கொரளூா், வெங்காயகுப்பம், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, சாலவனூா், பெருங்கலாம்பூண்டி கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்றும், வீதிகளில் நடந்து சென்றும் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தாா்.
அப்போது அவா் பேசும் போது முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அனைத்துத் தரப்பினரின் தேவைகளை அறிந்து, திட்டங்களை நிறைவேற்றியவா் முதல்வா் ஸ்டாலின். அவரது சாதனைகள் தொடர, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றாா் சிவா.
பிரசாரத்தில் தொகுதிப் பொறுப்பாளா் ம.ஜெயச்சந்திரன், காணை மத்திய ஒன்றியச் செயலா் ஆா்.பி.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தோா்பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

சிலம்பம் சுற்றி வாக்குசேகரித்த திமுக வேட்பாளா்

அன்னியூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

