பங்குனி உத்திரத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோயில் அா்ச்சகா் காா்த்தி உள்ளிட்ட அா்ச்சகா்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்மாம்பட்டு பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சிவன், முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

