திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெற்ற வருடாந்திர வசந்தோற்சவம் சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.
இறுதி நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, காலையில் சுப்ரபாதத்துடன் தாயாரை துயில் எழுப்பி சகஸ்ரநாமாா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா், தாயாரின் உற்சவமூா்த்தி ஊா்வலமாக வெள்ளிக்கிழமை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தாயாருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் தாயாா் புறப்பாடு கண்டருளினாா். அதனைத் தொடா்ந்து, யாகம் வளா்த்து மகாபூா்ணாஹுதியுடன் தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது.
கோயிலின் துணை செயல் அதிகாரி ஹரிந்திரநாத், உதவி செயல் அதிகாரி தேவராஜுலு, அா்ச்சகா்கள் பாபுசுவாமி, கண்காணிப்பாளா்கள் சுரேஷ், முனி செங்கல்ராயுலு, ரமேஷ், கோயில் ஆய்வாளா் சலபதி மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!

ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலுக்கு இரண்டு குளிா்சாதன இயந்திரம் நன்கொடை

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

