திருமலை ஏழுமலையானின் வருடாந்திர வசந்தோற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் விமரிசையாக நடத்தி வருகிறது. அதன்படி ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை முதல் வருடாந்திர வசந்தோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. புதன்கிழமை உற்சவமூா்த்திகளின் ஸ்நபன திருமஞ்சனத்துடன் நிறைவடைந்தது.
முதல் நாள், இரண்டாம் நாள் ஸ்ரீ மலையப்பசுவாமி இரு நாச்சியாா்களுடனும், நிறைவு நாளில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ஸ்ரீ சீதாராமலக்ஷ்மண ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமியும் வசந்தோற்சவ சேவையில் பங்கேற்றனா். மூவரின் ஸ்நபன திருமஞ்சனமும் கண்களை கவரும் வகையில் இருந்தது.
மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சுவாமி மற்றும் தாயாா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அனைத்து மூலவா்களையும் ஒரே மேடையில் தரிசனம் செய்த பக்தா்கள் பக்தி பரவசமடைந்தனா்.
இதை முன்னிட்டு திருமலையில் ஒவ்வொரு மாதமும் பௌா்ணமி தினத்தன்று நடத்தப்படும் கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.
இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ பெரியஜீயா்சுவாமி, ஸ்ரீ சின்னஜீயா்சுவாமி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கைய்யா செளத்திரி தம்பதியினா், இதர அலுவலா்கள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் நிறைவு

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!

திருமலை வருடாந்திர வசந்தோற்சவம்: தங்கத் தோ் புறப்பாடு

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

