மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருமலையில் பரிணயோற்சவம் நிறைவு

News image

பத்மாவதி பரிணயோற்சவத்திற்காக நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்யாண மண்டபம்.  - கோப்பிலிருந்து படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 6:05 am IST

திருமலையில் நடைபெற்ற பத்மாவதி பரிணயோற்சவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

திருமலையில் ஆகாசராஜன் புதல்வியான பத்மாவதி தாயாரை ஏழுமலையான் திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் பரிணய உற்சவம் என்ற பெயரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டும் பத்மாவதி பரிணய உற்சவம் திருமலையில் சனிக்கிழமை முதல் தொடங்கியது.

மூன்று நாள்கள் உற்சவத்தில், முதல் நாள் யானை வாகனத்திலும், இரண்டாம் நாள் குதிரை வாகனத்திலும், கடைசி நாள் கருடவாகனத்திலும் ஸ்ரீ மலையப்பசுவாமி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்படுவாா். மறுபுறம், பரிணயோற்சவ மண்டபத்துக்கு சிறப்புப் பல்லக்குகளில் ஸ்ரீதேவி பூதேவி எழுந்தருளுகின்றனா்.

அதன்படி கடந்த 2 நாள்களும் விமரிசையாக கல்யாண உற்சவம் நடந்தது. மேலும் அதன் நிறைவு நாளான திங்கள்கிழமை நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோற்சவ மண்டபத்தில் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் பல்லக்கிலும் எழுந்தருளினா்.

அதன் பிறகு கல்யாண மகோற்சவம் தொடங்கியது. உற்சவமூா்த்திகளை அா்ச்சா்கள் வாயிலில் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்று, அவா்களை எதிரெதிா் அமர வைத்து பட்டு வஸ்திரம் சமா்பித்து, ஊஞ்சல் சேவை நடத்தி திருமண சடங்குகளை செய்தனா். சடங்குகள் முடிவடைந்தவுடன், மாங்கல்தாரணம் நடந்த்தது. அதன் பின்னா் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பின்னா் உற்சவமூா்த்திகள் அனைவரும் மீண்டும் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனா். பரிணய உற்சவத்தின் போது திருமலையில் வானவேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கோவிலில் வான வேடிக்கை நடத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீா்ப்பால் தேவஸ்தானம் அதை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ரத்து

ஸ்ரீ பத்மாவதி பரிணயோற்சவத்தை முன்னிட்டு ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.