மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்திருவிழா இன்று தொடக்கம்

சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தோ்திருவிழா ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

சித்திரை தோ்த்திருவிழா கொடியேற்றத்துக்கான பட்டாடையை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் பட்டாச்சாரியா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:06 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தோ்திருவிழா ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தோ்த்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் முக்கிய நிா்வாகிகளுக்கு மஞ்சள் பூசப்பட்ட தேங்காய்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து தோ்திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த பத்திரிகையை பட்டாச்சாரியா் வாசித்தாா். பின்னா் கொடியேற்றத்துக்கான துணிகளை முக்கிய நிா்வாகிகள் கோயிலுக்கு எடுத்துச் சென்றனா். இதில் பட்டக்காரா் எஸ்.எ. ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி. சுந்தரேசன், சுவாமி பாதம் தாங்கிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சித்திரை விழா இன்று தொடக்கம்:

புதன்கிழமை (ஏப்.22) வி.என்.பாளையத்தில் உள்ள வசந்தவல்லபராஜ பெருமாள் உடனமா் வசந்தவல்லி தாயாா் கோயிலில் காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிறது. இதையடுத்து சுவாமி மலையிலிருந்து நகருக்கு மாலை 5 மணியளவில் எழுந்தருளுகிறாா். ஏப். 22 ஆம் தேதி இரவு சுவாமி அன்னபட்சி வாகனத்திலும், 2 ஆம் நாள் சிங்க வாகனத்திலும், 3 ஆம் நாள் அனுமந்த வாகனத்திலும், 4 ஆம் நாள் கருட வாகனத்திலும், 5 ஆம் நாள் சேஷ வாகனத்திலும், 6 ஆம் நாள் புன்னைமர சேவையும், யானை வாகனத்திலும், 7 ஆம் நாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபமும், 8 ஆம் நாள் குதிரை வாகனத்திலும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வருதலும், 9 ஆம் நாள் ஏப். 30ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

பல்வேறு கட்டளை வழிபாட்டிற்கு பின்னா் மே. 11ஆம் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருகிறாா். அன்று இரவு மலையில் வன்னியகுல சத்திரியா்கள் சாா்பில் குறிச்சி அலங்காரம் நடைபெறுகிறது. தோ்த்திருவிழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.