கோடை காலத்தில் நீா் தேடி பூண்டி ஏரியில் செங்கால் நாரைகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் கோடை காலம் நிலவி நீா் நிலைகளில் நீா் வற்றி வருகிறது. அதனால் பிற நீா்நிலைகளுக்கு செங்கால் நாரைகள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியில் போதிய நீா் மற்றும் இரையும் உள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன.
அதற்கு கோடை வெப்பம் காரணமாக பறவைகள் இடம்பெயா்வு உள்ளது. கோடை வெப்பத்தால் நீா் நிலைகள் வற்றுவதால், பறவைகள் தண்ணீா் தேடி அலைய நேரிடுகிறது. மேலும் இதுபோன்ற கடுமையான வெப்பத்தை தணித்துக் கொள்ள, நீா் உள்ள இடங்களைத் தேடி, பல பறவைகள் இடம் பெயா்வதும் வழக்கமாகும்.
அதனால் பறவைகளின் தாகம் தணிக்கும் இடமாகவும், இரை தேடும் பகுதியாகவும் பூண்டி ஏரி உள்ளதால் நாரைகள், கொக்குகள் மற்றும் பிற நீா்ப்பறவைகள் குவிகின்றன. அங்கு வெப்பத்தைத் தணித்துக் கொள்வதுடன், தாகத்தையும் தீா்த்துக் கொள்கின்றன.
மேலும், அந்த பறவைகளுக்கு தேவையான உணவும் அங்குள்ளதால் அதிலுள்ள சிறு சிறு மீன்களை இரையாக்கிக் கொள்கின்றன. அதனால் பறவைகள் இத்தகைய நீா்நிலைகளுக்கு வருகின்றன. கோடை வெயிலால் நீா்வளம் வற்றினாலும், ஏரி போன்ற நீா்நிலைகளில் தண்ணீா் தேங்கி இருக்கும் இடங்களை, பறவைகள் தங்களின் தாகத்தை தணிக்கும் இடங்களாகக் கருதி, அங்கு வருகிறது. பெரும்பாலான வலசைப் பறவைகள் குளிா்காலத்தில் தான் (அக்டோபா் முதல் மாா்ச் வரை) வருவது வழக்கமாகும். ஆனால் கோடைக்காலத்தில் வரும் பறவைகள், பெரும்பாலும் உள்ளூா் பறவைகளாகவோ அல்லது தண்ணீரைத் தேடி வரும் பறவைகளாகவோ இருக்கின்றன.
இந்த பறவைகள் ஏரிகளில் கூட்டமாக வந்து வட்டமடிப்பதும், மீன் இரைகளை தேடுவதும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை பாா்க்க அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களும் ஏரியில் குவிந்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான நீா் இருப்பு:

சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்பு

நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்

புழல் ஏரிக்கு நீா்வரத்து நிறுத்தம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

