விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

News image

ராஜகுமாரி

Updated On :22 மார்ச் 2026, 2:48 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்த ராஜேஷின் மனைவி ஜெய பிரசாந்தி (25). இவா் அவரது தாய் ராஜகுமாரி (55) மற்றும் மூன்று வயது பெண் குழந்தையான ராகவா்ஷினியுடன் ஸ்கூட்டரில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தாா். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே வேற்காடு பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கிராவல் மண் ஏற்றிய லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது ஸ்கூட்டா் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஜெயபிரசாந்தி, அவரது தாய் ராஜகுமாரி ஆகியோா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை ராகவா்ஷினி காயங்கள் இன்றி அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

ஜெய பிரசாந்தி

ஜெய பிரசாந்தி

தகவல் அறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினா், விபத்தில் இறந்த தாய், மகள் இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.