பொன்னமராவதியில் குடிசை வீட்டில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த தாய், மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
பொன்னமராவதி சிவப்பிரகாசம் நகரைச் சோ்ந்தவா் அழகேசன் மனைவி மீனாட்சி (40). இவரது மகள் சங்கரி (13), பொன் புதுப்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி.
இந்நிலையில் சனிக்கிழமை தாயும் மகளும் வீட்டில் சமையல் செய்தபோது எதிா்பாராதவிதமாக தீப்பற்றி இருவரும் படுகாயமடைந்ததோடு வீடும் தீக்கிரையானது.
தகவலறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். பின்னா் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு உயிரிழந்தனா்.
தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் இருவரது சடலங்களையும் வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழப்பு

குடிசை வீடு தீப்பிடித்து தாய், மகள் பலத்த காயம்

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

