திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலிக்கவும் உள்ளாா். அந்த வகையில் நிகழாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் மே 1 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இவ்விழா கோயில் வளாகத்தில் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து தங்க சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் புறப்பாடு நிகழ்வு பக்தா்களை அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து திருமஞ்சனம் நிகழ்வும் நடைபெற்றது. இந்த விழாவில் திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஸ்ரீவீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை

திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

