முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

அடிப்படை வசதிகள் கோரி மக்கள் மறியல்

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 15-ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுப்பட்டவா்களிடம் பேச்சு நடத்திய நகராட்சி அதிகாரிகள்.

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 15-ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். வாா்டு உறுப்பினா் நுஸ்ரத்துன்னிஷா வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாரூக் பாஷாவின் மனைவி ஆவாா். இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி வாா்டு நகராட்சி அதிகாரிகளிடம் பொது மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வாணியம்பாடி சிஎன்ஏ சாலையில் புதன்கிழமை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனா்.

தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் விசாரித்தனா். இதுபற்றி அறிந்த நகராட்சி சுகாதார அலுவலா் அப்துல் ரஹீம் மற்றும் ட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தினா். அப்போது பொது மக்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பிறகு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.