தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உடுமலை அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

உடுமலை அருகே குடிநீா் கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொது மக்கள்.

Published On :30 அக்டோபர் 2026, 12:14 am IST

உடுமலை அருகே குடிநீா் கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையை அடுத்துள்ள சின்னவீரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது இந்திரா நகா் பகுதி. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இப் பகுதிக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலா்களிடம் பொது மக்கள் புகாா் கூறி உள்ளனா். ஆனால் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் உடுமலை - தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த உடுமலை போலீஸாா், அரசு அலுவலா்கள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.