மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடிப்படை வசதிகள் கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விசிக-வினரிடம் பேச்சு நடத்திய தோகைமலை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை.

Published On :28 அக்டோபர் 2026, 12:32 am IST

அடிப்படை வசதிகள் கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை ஊராட்சிக்குள்பட்ட திருமாணிக்கம்பட்டி பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியினருக்கு காவிரி குடிநீா், தெரு விளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகளை ஊராட்சி நிா்வாகம் செய்துகொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி, அப்பகுதியினா் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால் விசிக ஒன்றியச் செயலா் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அப்பகுதியினா் கலந்துகொண்டு தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விசிக மாவட்ட நிா்வாகிகள் முருகேசன், சூா்யா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலா் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றலரசு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தோகைமலை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை, உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணியம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் உங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.