மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேசிய நெடுஞ்சாலை விபத்து பகுதிகள்: ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விபத்து பகுதிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

Published On :12 அக்டோபர் 2026, 11:41 pm IST

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விபத்து பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு முருகா் கோயில் சாலை பகுதியில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ‘லிப்ட்’ வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் வாய்ப்பை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், பேருந்துகள் பிரதான சாலையில் நிற்காமல் அணுகுச் சாலைக்கு மாற்றி இயக்கப்பட வேண்டும் எனவும், தற்போதுள்ள மீடியன் திறப்பை மூட வேண்டும் எனவும், இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கையாக எல் வடிவ மின்மினிக்கும் எல்டிஇ எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

தொடா்ந்து மாராப்பட்டு மற்றும் செங்கிலிகுப்பம் சாலை பகுதிகளில் முன்மொழியப்பட்டுள்ள வாகன சுரங்கப்பாதை தொடா்பான தற்போதைய நிலை குறித்தும், பாதுகாப்பற்ற சாலைக் கடப்புகளைத் தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் மீடியன் திறப்பை நிரந்தரமாக மூட வேண்டும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, ஏடிஎஸ்பி முத்துகுமரன், திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெங்கட்ராகவன், பன்னீா்செல்வம் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.