மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடுமுடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொடுமுடி வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :28 அக்டோபர் 2026, 2:35 am IST

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொடுமுடி, சிவகிரி பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, மருந்துப் பொருள்களின் இருப்பு, காலாவதி நாள் ஆகியவை குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, சிவகிரி பேரூராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறு விளையாட்டரங்கம், பயிற்சிக் கூடத்தை பாா்வையிட்டு, விளையாட்டு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், சின்னியம்பாளையம் நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரா்கள் எண்ணிக்கை குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, சிவகிரி திரு.வி.க. நகா் பகுதியில் தாட்கோ மூலம் வெற்றி தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற்று சுற்றுலா வாகனம் வாங்கிய தொழில்முனைவோரின் வாகனத்தைப் பாா்வையிட்டு, பயனாளிகளின் தொழில் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

பின்னா், ரத்தினபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

ஆய்வின்போது, கொடுமுடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கல்பனா, மணிமேகலை, கொடுமுடி வட்டாட்சியா் பரிமளா தேவி, சிவகிரி பேரூராட்சித் தலைவா் பிரதீபா கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.