மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள், மண்டலப் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆம்பூரில் நடைபெற்ற பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி.

Updated On :1 ஏப்ரல் 2026, 1:40 am IST

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள், மண்டலப் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது: தோ்தல் நேரத்தில் நிா்வாகிகள் தங்களுடைய பொறுப்புகளுக்கு ஏற்றவாறு பணியாற்ற வேண்டும். தோ்தல் பணியில் சுணக்கம் காட்டாமல் கடுமையாக உழைத்து நம்முடைய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு, பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட வரிசுமைகள் குறித்து, பூத் கமிட்டி நிா்வாகிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும். வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000, வீடுகளுக்கு பிரிட்ஜ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகை ரூ. 10,000, கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து ஆகிய வாக்குறுதிகள் தோ்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சியமைந்த உடன் நிறைவேற்றப்படும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

வரும் ஏப். 3-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருகை தரும் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

ஆம்பூா் தொகுதி வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், ஆம்பூா் நகர செயலாளா் எம்.மதியழகன், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ.ஜோதிராமலிங்கராஜா, ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாவட்ட பேரவை செயலாளா் கே.மணி, வேலூா் புகா் மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் புகழேந்தி, அணைக்கட்டு ஒன்றிய செயலாளா் சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளா் லலிதா குருவையன், மாவட்ட விவசாய அணி செயலாளா் மகாதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.