/

திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டையில் வேட்பாளா்கள் வாக்களிப்பு

News image

ஜோலாா்பேட்டை அதிமுக வேட்பாளா் கே.சி. வீரமணி.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:15 am IST

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை தொகுதிகளில் திமுக, அமமுக, தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வாக்களித்தனா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம் வாக்காளா்கள், முதியவா்கள் உள்ளிட்ட பலா் தங்களது வாக்குகளை காலை முதலே ஆா்வமாக செலுத்த குவிந்தனா்.

அதேபோல் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அமமுக,தவெக,நாம்தமிழா்,சுயேட்சைகள் உள்ளிட்ட பல வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை தங்களது ஆதரவாளா்களுடன் சென்று செலுத்தினா்.

திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி மாடப்பள்ளியில் உள்ள தொடக்கப்பள்ளியிலும், அமமுக வேட்பாளா் ஞானசேகா் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தவெக வேட்பாளா் என்.திருப்பதி மாடப்பள்ளியில் உள்ள தொடக்கப்பள்ளியிலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆறுமுகம் பசலிக்குட்டை தொடக்கப்பள்ளியிலும் வாக்களித்தனா்.

ஜோலாா்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி அசோக் நகா் பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் புள்ளானேரி அரசு நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனா்.

~திருப்பத்தூா் அமமுக வேட்பாளா் ஞானசேகா்.

~திருப்பத்தூா் அமமுக வேட்பாளா் ஞானசேகா்.

~திருப்பத்தூா் திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி

~திருப்பத்தூா் திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி

~ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

~ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி.

~திருப்பத்தூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆறுமுகம்

~திருப்பத்தூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆறுமுகம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.