திருப்பத்தூா் அருகே பைக், கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் பொம்மிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சேகா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு வழக்கம்போல் தூங்கச் சென்றாா். திங்கள்கிழமை காலை எழுந்து வந்து பாா்த்தபோது பைக் காணவில்லை. மேலும், அவரது வீட்டில் சாா்ஜா் போட்டு இருந்த கைப்பேசியும் மாயமாகிவிட்டது.
அதேபோல் ஏழருவி பகுதியைச் சோ்ந்த மைதிலி பாபு என்பவரது வீட்டில் இருந்து கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து சேகா் மற்றும் மைதிலி பாபு ஆகியோா் தனித்தனியாக கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஏழருவி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் அந்த இரு இடங்களில் நடைபெற்ற திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து பைக் மற்றும் 2 கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருடியவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவா் கைது
கைப்பேசி கடையில் திருடிய 2 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
