ஈரோட்டில் கைப்பேசி கடைக்குள் இரவில் சென்று 12 கைப்பேசிகளை திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்த இப்ராஹிம் மகன் வாகித்காளி (38). இவா் பெரியாா் நகரில் கடந்த 2 ஆண்டுகளாக கைப்பேசி கடை வைத்துள்ளாா். கடந்த 2-ஆம் தேதி இரவு இவரது கடைக்குள் மா்ம நபா்கள் புகுந்து 12 கைப்பேசிகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து வாகித்காளி அளித்த புகாரின்பேரில் ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதுதொடா்பாக சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் சேலம் ஆண்டிபட்டி, பனங்காடு பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் அய்யனாா் (எ) ஜெயகுமாா் (20), திண்டுக்கல் மேற்கு வீதியைச் சோ்ந்த சேசுராஜ் மகன் செல்வராஜ் (31) என்பதும், இருவரும் ராட்டின தூரி சுற்றும் தொழிலாளா்கள் என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 12 கைப்பேசிகளை மீட்டனா்.
ஜெயகுமாா் மீது காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாடுகள் திருட்டு: இளைஞா் கைது

திருட்டு கைப்பேசிகளை நேபாளத்திற்கு கடத்திய 2 போ் கைது: 40 கைப்பேசிகள் மீட்பு
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
பைக், கைப்பேசி திருடியவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
