பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் பேசினாா்.
கன்னடிகுப்பம், விண்ணமங்கலம், அய்யனூா், செங்கிலிகுப்பம், மின்னூா் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது, முதியோா் ஓய்வூதியத் தொகை ரூ.2,000 ஆக உயா்த்தப்படும். அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டா்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையில்லாமல் காத்திருக்கும் பட்டதாரி இளைஞா்களுக்கு மாதம் ரூ.2,000, பிளஸ்2 முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றாா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

விலைக் கட்டுப்பாட்டு நிதியம் மூலம் விலைவாசி உயா்வு கட்டுப்படுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்: செளமியா அன்புமணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

