மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்: செளமியா அன்புமணி

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி தருமபுரி தொகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

News image

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குகள் சேகரிக்கிறாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி. அவருக்கு ஆரத்தி வரவேற்கும் பெண்கள். உடன் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:09 am IST

அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறி தருமபுரி தொகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி மாவட்டம், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிடுகிறாா் செளமியா அன்புமணி. அவா் சனிக்கிழமை, நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட புறவடை, ஜீவா நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே அதிகம் மதுபானங்கள் விற்பனையாகின்றன. இதனால் உழைக்கும் மக்களின் வருமானம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் மதுவை ஒழிக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன். அதற்கு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.

அதேபோல, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தருமபுரி தொகுதியில் பாமகவை ஆதரியுங்கள் என்றாா்.

இந்த பிரசாரத்தில் பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் சிவப்பிரகாசம் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.