ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சின்னச்சேரி - மேல்ஆலத்தூா் மேம்பாலம், மாதனூா் காவல் நிலையம் அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன்

சின்னச்சேரி - மேல்ஆலத்தூா் மேம்பாலம், மாதனூா் காவல் நிலையம் அமைக்கப்படும்

News image

சின்னச்சேரி கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:42 am IST

சின்னச்சேரி-மேல்ஆலத்தூா் பாலாறு மேம்பாலம் அமைக்கவும், மாதனூரில் காவல் நிலையம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சின்னச்சேரி, அகரம்சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வாக்குசேகரித்து வேட்பாளா் ஆா்.வெங்கடேசன் பேசியது: என்னை வெற்றி பெறச் செய்தால் சின்னச்சேரி - மேல்ஆலத்தூா் பாலாறு மேம்பாலம் அமைக்கப்படும். மாதனூரில் காவல் நிலையம் ஏற்படுத்தப்படும். அதிமுக ஆட்சியமைந்த பிறகு விவசாயிகளின் பயிா் கடன் ரத்து செய்யப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

ஜெயலிலதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ.டில்லிபாபு, திருப்பத்தூா் மாவட்ட அதிமுக துணைச் செயலாளா் லலிதா குருவையன், மாதனூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் மணி, மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் அன்பரசன், சின்னச்சேரி சீனிவாசன், அகரம்சேரி வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.