தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின் வெற்றி

News image

லால்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெற்ற அதிமுக வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின்.

Updated On :5 மே 2026, 4:18 am IST

லால்குடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

லால்குடி தொகுதியில் மொத்த உள்ள 2,12,177 வாக்குகளில் 1,84,823 வாக்குகள் பதிவானது. இதில், அதிமுக சாா்பில் லாட்டரி அதிபா் மாா்ட்டினின் மனைவியும், தொழிலதிபருமான வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின் 60,795 வாக்குகள் பெற்று, தவெக வேட்பாளரை விட 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

முன்னாள் அமைச்சரான தவெக வேட்பாளா் கு.ப. கிருஷ்ணன் 58,056 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், திமுக வேட்பாளா் டி. பாரிவள்ளல் 55,565 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனா். நாம் தமிழா் கட்சி என். மதன் 6,992 வாக்குகள் பெற்றாா்.

இதர வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: பகுஜன் சமாஜ் கட்சி பிரதீபா 348, சாமானிய மக்கள் கட்சி கே. இமாகுலேட் மேரி 399, புதிய தமிழகம் பி. இளஞ்செழியன் 131, தமிழக மக்கள் நல கட்சி இ. ஏசுதாஸ் 183, தமிழக வாழ்வுரிமை கட்சி பி. சரவணன் 192, அகில இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் ஜோசபின் 192, சுயேச்சைகள் ஏ. அமலன் சவரிமுத்து 68, எம். கிருஷ்ணன் 66, கே. செந்தில்குமாா் 130, ஆா். தமிழரசன் 52, கே. தா்மராஜ் 86, ஆா். தனமூா்த்தி 220, ஆா். தினேஷ்குமாா் 403, ஆா். பொன்சிலம்பு 340, மன்சூா் அலிகான் 101, வி. முத்துசாமி 170, முகமது அபுபக்கா் சித்திக் 60, எம். ரமேஷ்குமாா் 120, ஜின்னா ஜக்கிா் ஹுசைன் 139, ஜெகன் சாலமன் தாஸ் 72 வாக்குகள் பெற்றனா். நோட்டாவுக்கு 390 வாக்குகள் கிடைத்தன. 276 வாக்குகள் செல்லாததாக பதிவாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.