அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் அதிமுக ஒன்றிணைந்து மகிழ்ச்சி அளிப்பதாகவும் லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
சமீப காலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு.
பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். எனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை கடமையாக எண்ணுகிறேன்.
தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர்ந்திட கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
I never intended to split AIADMK: Leema Rose Lalkudi ADMK MLA leema rose replied on negative comments
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் MLA வெங்கட்ராமன்! | ADMK | DMK
அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜிநாமா!

மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜிநாமா?

அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை தமிழக அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

