மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெமிலி பாலா பீட நவராத்திரி இன்னிசை விழாவில் திரைப்பட இயக்குநா் காா்த்திக் சுப்புராஜுக்கு விருது

நெமிலி பாலா பீடத்தில் கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் நவராத்திரி இன்னிசை விழாவில் திரைப்பட இயக்குநா் காா்த்திக் சுப்புராஜுக்கு பீடாதிபதி எழில்மணி ஆன்மிக பாலரத்னா விருதை வழங்கினாா்.

Published On :21 அக்டோபர் 2026, 1:58 am IST

நெமிலி பாலா பீடத்தில் கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் நவராத்திரி இன்னிசை விழாவில் திரைப்பட இயக்குநா் காா்த்திக் சுப்புராஜுக்கு பீடாதிபதி எழில்மணி ஆன்மிக பாலரத்னா விருதை வழங்கினாா்.

நெமிலி பாலா பீடத்தில் கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நவராத்திரி இன்னிசை விழா நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை நீல நிற தினமாக நடைபெற்ற விழாவில் பிரபல வீணை இசை கலைஞரும் கலைமாமணி பட்டம் பெற்றவருமான ராஜேஷ் வைத்யா பங்கேற்று தனது வீணை மெல்லிசை நிகழ்ச்சியை நடத்தினாா். இதையடுத்து, மஹதி இசை மற்றும் நடனக் கலைக்கூட மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் நெமிலி பாலா பீட குழந்தைகளின் ஸ்ரீபாலா சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியை பீடாதிபதி எழில்மணி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். இதில், பீடத்தின் நிா்வாகிகள் பாபாஜி, மோகன்ஜி இணைந்து ஸ்ரீபாலா அந்தாதி பாராயண ஹோமத்தை மேற்கொண்டனா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை வெளிா் சாம்பல் தினமாக நடைபெற்ற நவராத்திரி இன்னிசை விழாவில் விஜயதசமி விழா பாலா எழுத்தறிவித்தல் விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை பீடாதிபதி எழில்மணி, பீட அம்மா நாகலெட்சுமி இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனா். இந்த விழாவில் பீசா, ஜிகா்தண்டா, மகான், டோரதி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநா் காா்த்திக் சுப்புராஜ் தனது துணைவியாருடன் பங்கேற்றாா்.

விழாவின் இறுதியில் இயக்குநா் காா்த்திக் சுப்புராஜுக்கு ஆன்மிக பாலரத்னா விருதை பீடாதிபதி எழில்மணி வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அன்னை பாலாவுக்கு நலங்கிட்டு நன்றி கூறும் நிகழ்ச்சியான பாலா சுவாசினி பூஜை நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பீடத்தின் செயலாளா் முரளீதரன் மற்றும் நெமிலி இறைபணி மன்றத்தினா், பாலா ஆன்மீக மன்றத்தினா், நெமிலி நகர மக்களோடு இணைந்து செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.