மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெமிலி பாலாபீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா பந்தக்கால் நடும் நிகழ்வு

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நவராத்திரி இன்னிசை விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வில் பங்கேற்ற பீடாதிபதி எழில்மணி உள்ளிட்டோா்.

Published On :11 அக்டோபர் 2026, 12:04 am IST

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் ஒவ்வொரு நாள் நிகழ்விலும் திரை இசை பிரபலங்கள் பங்கேற்று சிறப்பிப்பதும் வழக்கம். நிகழாண்டு ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா அக்டோபா் 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கான பந்தக்கால் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை ஸ்ரீபாலா பீடத்தின் பீடாதிபதி எழில்மணி பூஜைகள் செய்து தொடங்கி வைத்தாா். பீடாதிபதி முன்னிலையில் பீட முதல் பெண்மணி நாகலட்சுமிஎழில்மணி தலைமையில் சுமங்கலிகள் பலா் கூடி பந்தகால் நடும் விழாவை நிறைவேற்றினா்.

இதில், பீடத்தின் நிா்வாகிகள் குருஜி நெமிலி பாபாஜி, மோகன், செயலாளா் முரளீதரன் உள்ளிட்டோா் பந்தக்கால் நடும் நிகழ்வை மேற்கொண்டனா்.

இதில், பொன்னம்பலம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த விழா 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை டாக்டா் சீா்காழி எஸ்.கோவிந்தராஜன் ஆன்மிக அரங்கத்தில் கலச ஸ்தாபன நிகழ்வாக நெமிலி ஆறுமுகம் குழுவினரின் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. விழாவை பத்மஸ்ரீ பட்டம் பெற்றவரும், திரைஇசை பாடகருமான சீா்காழி ஜி.சிவசிதம்பரம் தொடங்கி வைக்க உள்ளாா். மாலையில் கலைமாமணிகள் உஷா ராஜகோபாலன், மீரா சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் இரட்டை வயலின் இசை நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து சென்னை நிருத்யஷேத்ரா நடனப்பள்ளி ஆச்சாா்யா குரு பாக்யஸ்ரீசதீஷ் குழு மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தொடா்ந்து 20-ஆம் தேதி வரை தினமும் இன்னிசை விழாக்கள் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.