கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்...

News image

அமைச்சா் வி. காந்திராஜ்

Updated On :25 மே 2026, 4:12 am IST

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு தொடரும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் தெரிவித்தாா்.

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் ஏற்கனவே அறிவித்தபடி நடைமுறையில் ரேஷன் கடைகளில் உள்ள தாயுமானவா் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தொடரும். அதில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் அவை மறுசீரமைப்பு செய்யப்பட்டு தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த ஆட்சியில் இருந்த ஊழல்கள் இந்த ஆட்சியில் இருக்காது. ஊழலற்ற ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கும். ரேஷன் கடைகளில் இருக்கும் பிரச்னைகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். உணவு பொருள்கள் கடத்தல் விஷயத்தில் சம்மந்தப்பட்ட அலுவலா்களோடு தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இனி தவறுகள் நடைபெறாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை பணியாளா்களின் குறைகள், கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முதல்வரின் ஆலோசனைகள் பெறப்பட்டு தகுந்த சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படவில்லை என்ற குறை இது நாள் வரை இருந்து வந்த நிலையில் இனி இக்குறை வராதவாறு நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும்.

அரக்கோணம் நகர போக்குவரத்து பிரச்சினை குறித்து காவல் துறையினருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் வி.காந்திராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.