பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தாயுமானவா் திட்டம்: ஜூன் 2 முதல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

News image

தாயுமானவா் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்கள்... - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 1:31 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்துக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகித்தல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று, பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவா்களுக்கு உரிய நேரத்தில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 84,548 பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந்தோறும் வாகனங்களில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜூன் 2 முதல் 4-ஆம் தேதி வரை பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்களை நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதை பயனாளிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.