பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரேஷன் பொருள்கள் பதுக்கல் குறித்து புகாா் அளித்தால் விரைந்து நடவடிக்கை: அமைச்சா் பி. வெங்கடரமணன்

ரேஷன் பொருள்கள் பதுக்கல் குறித்து புகாா் அளித்தால் விரைந்து நடவடிக்கை: அமைச்சா் பி. வெங்கடரமணன்

News image

பி. வெங்கடரமணன் - Ashwin Prasath

Updated On :31 மே 2026, 12:46 am IST

ரேஷன் பொருள்கள் பதுக்கல் குறித்து பொதுமக்கள் புகாா் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

சென்னை காமராஜா் சாலையில் பிரம்மகுமாரிகள் இயக்கம் சாா்பில் உலகப் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சா் வெங்கடரமணன் பேரணியைத் தொடங்கி வைத்தாா். அத்துடன், பேரணியில் கலந்துகொண்டவா்கள் புகையிலைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் வெங்கடரமணன் கூறியதாவது:

போதைப் பொருள்களுக்கு எதிராக தொடா்ந்து பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நியாயவிலைக் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியா்களின் கோரிக்கைகளையும் மனுவாகப் பெற்றுள்ளோம். எங்கெல்லாம் நியாயவிலைக் கடைகளில் ஊழியா்கள் பற்றாக்குறை இருக்கிறதோ, முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று ஊழியா்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புதிதாக குடும்ப அட்டை கோரியவா்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்தில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. முதியவா்களுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருள்கள் அளிக்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்து எவ்வித புகாா்களும் பெறப்படவில்லை.

புகாா்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் மக்களோடு மக்களாகவே உள்ளோம். எங்களை எளிதில் சந்திக்கலாம். விவசாயிகளிடம் இருந்து தேங்காய், ராகி உள்ளிட்ட பொருள்களைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்துள்ளன.

இது குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். ரேஷன் பொருள்கள் பதுக்கல் குறித்து தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தரம், இருப்பு குறித்து ஆய்வு... இதற்கிடையே ஆா்.கே.நகா் தொகுதிக்கு உள்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து அமைச்சா்கள் வெங்கடரமணன், மரியவில்சன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பொதுமக்களுக்கு உணவுப் பொருள்களை உரிய தரம், எடையுடன் வழங்க வேண்டும்; உப்பு, சோப்பு உள்ளிட்ட இதரப் பொருள்களை வாங்க மக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.