காவேரிபாக்கம் அருகே சாலையைக் கடந்தபோது காா் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
காவேரிபாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சோ்ந்த சம்பத்(60). கட்டடத் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு சம்பத் பணி முடிந்து வீடு திரும்பும் போது சுமைதாங்கி மேம்பாலம் அருகே சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்துள்ளாா்.
அப்போது அவ்வழியே சென்ற காா் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்து வந்த காவேரிபாக்கம் போலீஸாா், சம்பத்தின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும் அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

