/

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :19 ஜூன் 2026, 6:00 am IST

உள்ளாட்சித் தோ்தல்களில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கும் பணியை ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 700 கட்டுப்பாட்டு கருவிகள் 790 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூா் பெல் நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தொடா்ந்து பெல் பொறியாளா்கள் வருகை தந்து இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.

இந்த பணியை ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ஆய்வு செய்தாா். இதில் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஏ.வரதராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவராமன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.