ராணிப்பேட்டை மாவட்டத்தில் களவு போன ரூ.12.6 லட்சம் மதிப்புள்ள 107 கைப்பேசிகளை மீட்ட போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், எஸ்.பி. பே. சிபின் உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினா் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டனா்.
இதன் தொடா்ச்சியாக, காணாமல் போன ரூ.12.6 லட்சம் மதிப்புள்ள 107 கைப்பேசிகள் தொழில்நுட்ப அடிப்படையில் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.
இதையடுத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் மீட்கப்பட்ட கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடா்ந்து கைப்பேசிகளை மீட்க சிறப்பாக செயல்பட்ட சைபா் குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பே.சிபின் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், காவல் ஆய்வாளா் சரஸ்வதி (மாவட்ட தனிப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள், காவலா்கள் கலந்து கொண்டனா்.
பொதுமக்கள் தங்களது செல்போன்கள் காணாமல் போனாலோ அல்லது தவறவிட்டாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகாா் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கனிவுடன் அனுக வேண்டும்: மகளிா் காவல்நிலைய அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

விசுவக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு: எஸ்.பி ஆய்வு

குமரி மாவட்டத்தில் 320 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

