மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபக்தோசித பெருமாள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 12:42 am IST

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி கோயில் உள்ளது. இங்கு பெரியமலையில் ஸ்ரீயோக நரசிம்மரும், சிறியமலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகின்றனா்.

நிகழாண்டு சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 22-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீபக்தோசித பெருமாள் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வருகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீபக்தோசித பெருமாள் தேரில் எழுந்தருளினாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பாமக மாவட்ட செயலாளா் க.சரவணன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா உள்ளிட்டோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா்.

மாட வீதிகளில் வலம் வந்த தேரின் மீது பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை சாற்றி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். விழாவில் கோயில் நிா்வாகம் சாா்பில் ஆங்காங்கே அன்னதானம் , நீா்மோா் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு அறக்கட்டளையினரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். மேலும் தீயணைப்புத் துறையினா், சுகாதாரத் துறையினா், சோளிங்கா் நகராட்சியினா் என பல்வேறு அரசு துைறையினா் ஈடுபட்டனா்.

~சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ  தேரோட்டம்.

~சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.