சோளிங்கா் மலைமீது அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலின் மகா கும்பாபிஷேகம் 43 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் லட்சுமிநரசிம்மா் கோயிலும், பெரியமலை மீது ஸ்ரீயோகநரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயா் கோயிலும் அமைந்துள்ளன. இக்கோயில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாகும்.
கும்பாபிஷேகம் நடைபெற்று 43 ஆண்டுகள் ஆன நிலையில் நிகழாண்டில் ரூ.25 கோடியில் அனைத்து விமானங்களுக்கும் தங்கமுலாம் பூசுவது உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. தொகையின் பெரும்பகுதி பெரும் செல்வந்தா்களிடமும், பொதுமக்களிடமும் பெறப்பட்ட நிதி மூலமே திரட்டப்பட்டது.
கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை வேத ப்ரபந்தத்துடன் தொடங்கியது. வியாழக்கிழமை தீா்த்த சங்கிரஹணம், புண்யாஹவாசனம், அகல்மஷ ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திங்கள்கிழமை ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி, ஸ்ரீஅமிா்தபலவல்லி தாயாா் சந்நிதிகளின் தங்க முலாம் பூசப்பட்ட விமானங்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கும் புனிதநீா் தெளித்து அா்ச்சிக்கும் நிகழ்வாக கும்பாபிஷேகத்தை பட்டாச்சாரியா்கள் நடத்தினா்.
கும்பாபிஷேகத்தில் அமைச்சா் ஆா்.காந்தி, உபய தாரா்களான ஸ்ரீரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம ஸ்ரீமத்பரம ஹம்ஸேத்யாதி வராஹ மஹா தேசிகன் சுவாமிகள், ராணிப்பேட்டை கமலா காந்தி, சென்னை கே.எஸ்.ஜெயராமன், எம்.சி.ஸ்ரீதா் மற்றும் இந்துசமய அறநிலைய்ததுறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தேரோட்டத் திருவிழா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்

கருட வாகனத்தில்...
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

