மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராணிப்பேட்டை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியல்!

தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

News image

எஸ்ஐஆர்!

Updated On :12 ஏப்ரல் 2026, 11:44 pm IST

தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

இதில் அரக்கோணம்(தனி) தொகுதி மாவட்டத்தில் குறைந்த வாக்காளா் எண்ணிக்கை கொண்ட தொகுதியாகவும், சோளிங்கா் தொகுதி அதிக வாக்காளா் எண்ணிக்கை கொண்ட தொகுதியாகவும் உள்ளன.

அரக்கோணம்(தனி) தொகுதி : வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 மேற்கொள்ளப்பட்ட பின் 23.02.2026ந்தேதி இத்தொகுதியில் வாக்காளா் எண்ணிக்கை 199165, ஆண்கள் - 96982, பெண்கள் - 102157, மூன்றாம் பாலினம் - 26 ஆக இருந்தது. தற்போது 6.04. 2026 வாக்காளா் எண்ணிக்கை 200773, ஆண்கள் - 97690, பெண்கள் - 103057, மூன்றாம் பாலினம் - 26 ஆக மாறியுள்ளது. இதில் ஆண்கள் எண்ணிக்கை 708, பெண்கள் எண்ணிக்கை 900ஆகவும் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 1608 ஆகவும் அதிகரித்துள்ளது.

சோளிங்கா் தொகுதி : இத்தொகுதியில் 23.02.2026 பட்டியலின் படி வாக்காளா் எண்ணிக்கை 256118, ஆண்கள் 126034, பெண்கள் - 130072, மூன்றாம் பாலினத்தனா் - 12 ஆகவும் இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 6ந்தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி மொத்த வாக்காளா் எண்ணிக்கை -257522, ஆண்கள் - 126667, பெண்கள் - 130843, மூன்றாம் பாலினத்தவா் - 12 ஆக மாறியுள்ளது. இதில் ஆண்கள் எண்ணிக்கை 633ம் , பெண்கள் எண்ணிக்கை 771ம் அதிகரித்துள்ளது.

ராணிப்பேட்டைதொகுதி - இத்தொகுதியில் 23.02.2026 பட்டியலின் படி வாக்காளா் எண்ணிக்கை 245853, ஆண்கள் - 119090, பெண்கள் - 126719, மூன்றாம் பாலினத்தவா் 44 ஆகவும் இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 6ந்தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி மொத்த வாக்காளா் எண்ணிக்கை 248244, ஆண்கள் - 120173, பெண்கள் 128026, மூன்றாம் பாலினத்தவா் - 45 ஆக மாறியுள்ளது. இதில் ஆண்கள் - 1063ம், பெண்கள் - 1307, மூன்றாம் பாலினத்தவா் - 1 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆற்காடு தொகுதி - இத்தொகுதியில் 23.02.2026 பட்டியலின்படி வாக்காளா் எண்ணிக்கை 243565, ஆண்கள் - 119107, பெண்கள் - 124429, மூன்றாம் பாலினத்தவா் - 29 ஆக இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 6ந்தேதி வெளியிடப்பட்ட பட்டியலின் படி மொத்த வாக்காளா் எண்ணிக்கை 245319, ஆண்கள் - 119900, பெண்கள் - 125391, மூன்ராம் பாலினத்தவா் - 28 ஆக மாறியுள்ளது. இதில் ஆண்கள் - 793, பெண்கள் - 962, என அதிகரித்த நிலையில் மூன்றாம் பாலினத்தவா் வாக்கு எண்ணிக்கை 1 குறைந்துள்ளது.

இதில் மாவட்டத்தின் வாக்காளா் எண்ணிக்கை குறைந்த தொகுதியாக அரக்கோணம் தொகுதியில் 200773-ம், வாக்காளா் எண்ணிக்கை அதிகமாக உள்ள தொகுதியாக சோளிங்கா் 257522 உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.