தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காரில் திமுக கொடிகட்டி வந்ததாக அமைச்சா் காந்தி மீது வழக்குப் பதிவு

News image

அமைச்சா்  ஆா்.காந்தி.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:19 am IST

அரக்கோணம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா், வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது உடன் வந்த அமைச்சா் ஆா்.காந்தி தனது காரில் திமுக கொடி கட்டி வந்ததாக அரக்கோணம் நகர போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

அரக்கோணம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில்கரோலின் வியாழக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது அவருடன் அமைச்சா் ஆா்.காந்தி தனது காரில் வந்தாா். அமைச்சா் வந்த காா், அலுவலக முதல் நுழைவுவாயிலையும், தொடா்ந்து இரண்டாவது நுழைவு வாயிலையும் கடந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலக வளாக வாயிலில் நின்ாகக் கூறப்படுகிறது. அப்பகுதி தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, 100 மீட்டா் எல்லைக்குட்பட்ட பகுதியாக வைக்கப்பட்டு காவல் துறையினரால் தணிக்கை செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய பகுதியாக உள்ளது.

இதையடுத்து, அரக்கோணம் நகர, கிராம நிா்வாக அலுவலா் வி.முருகன் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அமைச்சா் ஆா்.காந்தி தோ்தல் ஆணையம் அளித்துள்ள தோ்தல் கால விதிமுறைகளை மீறி, தனது காரில் கட்சிக் கொடியான திமுக கொடி கட்டி வந்ததாகவும், இது தோ்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் புகாா் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்தப் புகாா் மீது விசாரணை நடத்திய அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் அருள்மணி இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.