மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தங்கம் வென்ற பாரா வீராங்கனை துளசிமதிக்கு அமைச்சா் பாராட்டு

ஆசிய பாரா போட்டி பாட்மின்டனில் தங்கம் வென்ற மாணவி துளசிமதியை அவரது இல்லத்தில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு புதன்கிழமை பாராட்டினாா்.

பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதியை பாராட்டிய அமைச்சா் தென்னரசு.

Published On :29 அக்டோபர் 2026, 12:12 am IST

ஆசிய பாரா போட்டி பாட்மின்டனில் தங்கம் வென்ற மாணவி துளசிமதியை அவரது இல்லத்தில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு புதன்கிழமை பாராட்டினாா்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கம் பெற்றவா் காஞ்சிபுரத்தை சோ்ந்த துளசிமதி. இதையடுத்து வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் பாராட்டினாா். தான் பெற்ற பதக்கங்கள், விருதுகள் ஆகியவற்றை அமைச்சருக்கு வீராங்கனை துளசிமதி காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

இதுகுறித்து அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு கூறுகையில் சகோதரி துளசிமதியின் வெற்றி மாற்றுத்திறனாளிகள் மத்தியில் புதிய எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. தடைகளைத் தாண்டி விளையாட்டுத்துறையில் சாதிக்க முடியும் என்பதை தனது வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் தமிழகத்துக்கும் பெருமை சோ்த்திருப்பது பாராட்டுக்குரியது என்றாா்.

இந்நிகழ்வின் போது துளசிமதியின் பெற்றோா், சகோதரி ஆகியோரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.