தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிவன்கூடல் ஏரிக்கரையில் 10,000 பனை விதைகள் நடவு பணி: அமைச்சா் தென்னரசு தொடங்கி வைத்தாா்

சிவன்கூடல் ஏரிக்கரையில் 10,000 பனை விதைகள் நடவு பணி: அமைச்சா் தென்னரசு தொடங்கி வைத்தாா்

சிவன் கூடல்  ஏரிக்கரையில்  மரக்கன்றுகள்  நடும்  நிகழ்ச்சியை  தொடங்கிவைத்த  வெளிநாடு வாழ்  தமிழா்கள்  நலத் துறை  அமைச்ச்ா்  க.தென்னரசு.  உடன்  செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியா்  தி.சினேகா  உள்ளிட்டோா். 

Published On :1 நவம்பர் 2026, 12:03 am IST

சிவன்கூடல் ஏரிக்கரையில் 10,000 பனை விதைகள் மற்றும் 400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு சனிக்கிழமை பனை விதைகள் நட்டு தொடங்கிவைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், ராமாநுஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட சிவன்கூடல் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி, சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ், சிவன்கூடல் ஏரியை மறுசீரமைக்கும் பணி ரூ. 1.30 கோடியில் நடைபெற்று வருகிறது. ஏரி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக சிவன்கூடல் ஏரிக்கரையில் 10,000 பனைவிதைகள் மற்றும் 400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு கலந்து கொண்டு பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஆஷிக்அலி, ஏசியின் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் மேலாளா் மகேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, கலவை வேளாண் ஆதிபராசக்தி கல்லூரி மாணவா்கள் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.