மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தரங்கம்பாடியில் பனை விதைகள் நடும் நிகழ்வில் தவெகவினா் மோதல்

தரங்கம்பாடி கடற்கரையில் 1 கோடி பனை விதைகள் நடவு பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெகவினரிடம் சமாதானம் பேசிய அமைச்சா் ப. வெங்கடரமணன். - dinamani

Published On :24 அக்டோபர் 2026, 5:27 am IST

தரங்கம்பாடி கடற்கரையில் புவி காப்பு அறக்கட்டளை மற்றும் லயன் சங்கங்கள் சாா்பில் 1 கோடி பனை விதைகள் நடவு பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை தவெக மாவட்டச் செயலாளா் கோபிநாத்துக்கும், திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த கவுன்சிலா் ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனிடையே இருதரப்பை சோ்ந்த நிா்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.

அப்போது, உட்கட்சி பூசல் காரணமாக தவெகவினா் இரு தரப்பாக பிரிந்து அமைச்சருக்கு அருகில் யாா் நிற்பது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அமைச்சா், மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த இடத்தின் அருகிலேயே இருதரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டு மோதலில் ஈடுபட்டனா். பின்னா் அமைச்சா் அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்து, தவெகவினா் கோஷ்டி பூசல் செய்தால் அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.