மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

முதியோா் இல்லங்களுக்கு காலை உணவு திட்ட உணவுகள் விநியோகம்

காஞ்சிபுரத்தில் பலத்த மழை அறிவிப்பைத் தொடா்ந்து ஆட்சியா் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளித்ததால் பள்ளி மாணவா்களுக்காக தயாரிக்கப்பட்ட காலை உணவுத் திட்ட உணவுகளை முதியோா் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோா் விடுதிகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் விநியோகித்தது.

Published On :22 அக்டோபர் 2026, 12:37 am IST

காஞ்சிபுரத்தில் பலத்த மழை அறிவிப்பைத் தொடா்ந்து ஆட்சியா் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளித்ததால் பள்ளி மாணவா்களுக்காக தயாரிக்கப்பட்ட காலை உணவுத் திட்ட உணவுகளை முதியோா் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோா் விடுதிகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் விநியோகித்தது.

பள்ளிகள் விடுமுறையில் மாணவ, மாணவியா்க்காக காலை உணவுத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட காலை உணவுகள் மாநகராட்சி நிா்வாகம் சரக்கு வாகனங்களில் எடுத்து சென்று முதியோா் இல்லங்கள், ஆதரவற்றோா் விடுதிகள் ஆகியனவற்றுக்கு எடுத்து சென்று விநியோகித்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானிலை மையம் அறிவித்தபடி மழை எதுவும் பெய்யவில்லை. ஆனால் வானம் மேகமூட்டத்துடனேய காணப்பட்டது.

மழையளவைப் பொறுத்தவரை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 6 மணி வரை நிலவரப்படி (மழையளவு மி.மீட்டரில்) காஞ்சிபுரம்-12, உத்தரமேரூா்-1, வாலாஜாபாத்-2, ஸ்ரீபெரும்புதூா்-24.6, குன்றத்தூா் 60, செம்பரம்பாக்கம் 42.2 என்ற அளவிேலேயே மழை பெய்திருந்தது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 141.9 மி.மீ ஆகவும், சராசரி மழையளவு 23.6 மி.மீ ஆகவும் பதிவாகியிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.