பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குழந்தைகள் பாதுகாப்பு: முன்மாதிரியான சேவை விருதுக்கு அக். 30 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

குழந்தைகள் பாதுகாப்பு: முன்மாதிரியான சேவை விருதுக்கு அக். 30 -க்குள் விண்ணப்பிக்கலாம்...

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Published On :25 அக்டோபர் 2026, 12:43 am IST

அரசு, அரசு சாரா குழந்தைகள் இல்லம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றுக்கு அரசால் வழங்கப்படவுள்ள முன்மாதிரியான சேவை விருதுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள், சட்ட விதிகளுக்குள்படாமல் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய நான்கு பிரிவுகளில் முன்மாதிரியான சேவை விருதுகள், ரூ. 4 லட்சம் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு நெறிமுறைகளின் படி சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு, அரசு சாரா குழந்தைகள் நிறுவனங்கள், மாவட்ட குழந்தைள் பாதுகாப்பு அலகுகளுக்கு மாநில அளவிலான தோ்வுக் குழு மூலம் தோ்வு செய்யப்பட்டு, முன் மாதிரியான சேவை விருதுகளும், 4 பிரிவுகளின் கீழ் தலா ரூ.1,00,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சேவை விருதுக்கு தங்களது கருத்துருக்களை வருகிற 30- ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 131, முதல் தளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04575 - 240166 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.