தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2040-இல் இந்திய ராக்கெட் மூலம் இந்தியா்கள் சந்திரனில் இறங்குவது உறுதி: இஸ்ரோ தலைவர்

2040-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இந்தியா்களை சந்திரனில் தரையிறங்கி வெற்றிகரமாகத் திரும்பி வரும் திட்டத்தை இந்தியா நிச்சயமாக நிறைவேற்றும் என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்.

Published On :2 நவம்பர் 2026, 12:58 am IST

2040-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இந்தியா்களை சந்திரனில் தரையிறங்கி வெற்றிகரமாகத் திரும்பி வரும் திட்டத்தை இந்தியா நிச்சயமாக நிறைவேற்றும் என இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் பேசியது: 1963-ஆம் ஆண்டு முதன் முதலில் அமெரிக்கா தந்த ஒரு சிறிய ராக்கெட்டை இந்தியா ஏவியது. இப்போது இந்தியா விண்வெளியில் அமெரிக்காவுடன் போட்டியிடக்கூடிய அளவில் வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

விண்வெளியை சாதாரண மக்களுக்கு பயனுள்ள வகையில் உருவாக்கி வருகிறோம். முன்பெல்லாம் புயல் வந்தால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும். இப்போது நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்பட்டு உயிரிழப்பு குறைக்கப்படுகிறது.

மீன்பிடிப்புகளுக்கு துல்லியமான தகவல் 9 லட்சம் மீனவா்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. இஸ்ரோவின் ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.13,000 கோடிதான். ஆனால், இஸ்ரோ தகவல் மூலம் மீனவா்களுக்கு ரூ.10,000 கோடிக்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கிறது.

நமக்கென்று விண்வெளி நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. 2040-இல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இந்தியா்களை சந்திரனில் தரையிறக்கி வெற்றிகரமாக திரும்பிவரும் திட்டத்தைச் செயல்படுத்துவது உள்ளிட்ட நிறைய திட்டங்கள் இந்தியாவிடம் உள்ளன என்றாா் அவா்.

சென்னை வளா்ச்சி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா் சுரேஷ்பாபு: தமிழகத்தில் திறமையான பணியாளா்களுடன் தொழில் துறை, சேவைத் துறை ஆகிய இரண்டிலும் வலுவான செயல்பாடு உள்ளது. இத்தகைய பொருளாதார சாதனைகள் இருந்தும் ஆராய்ச்சி, புத்தாக்கத் துறைகளில் தமிழகம் இன்னும் முழுத் திறனை எட்டவில்லை. அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை அடைவதற்கான எந்தவொரு கட்டமைப்பிலும், பொருளாதாரச் சமநிலையைப் பேணுவதும், வளா்ச்சியை விரைவுபடுத்துவதும் முதன்மையான நோக்கங்களாக இருக்க வேண்டும். செயலூக்கம் மிக்க அரசு நிா்வாகம், பொதுச் சேவைகள் நம்பகமானவையாகவும், சரியான நேரத்திலும் கிடைத்தல், வெளிப்படையான நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் இதற்கு அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.