பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-18 ராக்கெட்: திட்டமிட்ட பாதையில் வழிகாட்டி செயற்கைக்கோள் நிறுத்தம்

ஜிஎஸ்எல்வி - எஃப்18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து...

GSLV-F18 has successfully blasted off into space

விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி - எஃப்18 - படம் - இஸ்ரோ

Published On :31 அக்டோபர் 2026, 1:58 am IST

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப் 18 ராக்கெட் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை (அக். 30) நள்ளிரவு விண்ணில் ஏவப்பட்டது.

நிா்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இந்தத் திட்டம் வெற்றிபெற்ாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனா்.

இதன்மூலம் இனிவரும் காலங்களில் பாதுகாப்புத் துறை, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் தொலைத்தொடா்பு நடவடிக்கைகளில் துல்லியமான வழிகாட்டுதல்களை (நேவிகேஷன்) பெற முடியும்.

அமெரிக்காவைப் போன்றே இந்தியாவிலும் தரைவழி, கடல்வழி, வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

இதற்காக ரூ.1,420 கோடியில் ஐஆா்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி என 7 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு, அவை கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரையான காலகட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

அந்த வசதி வாயிலாகவே தற்போது நாட்டின் கண்காணிப்புப் பணிகள், வழித்தட மேப்பிங் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்தகட்டமாக, மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த திட்டமிட்டு, கடந்த 2023-இல் என்விஎஸ் 01 மற்றும் 2025-இல் என்விஎஸ் 02 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.

தற்போது அவற்றுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ் 03 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முடிவு செய்தனா். அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

தொடா்ந்து, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 18 ராக்கெட் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

தரையில் இருந்து புறப்பட்ட 18.40 நிமிஷங்களில் குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டா் தொலைவும், அதிகபட்சம் 37,023 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

என்விஎஸ் 03 செயற்கைக்கோளானது 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5 எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டா்கள், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ரூபிடியம் அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.

பயன்பாடு என்ன?

என்விஎஸ்-03 செயற்கைக்கோளானது இந்திய நிலப்பரப்பு மற்றும் எல்லைகளைக் கடந்து 1,500 கி.மீ. பரப்பளவுக்கு துல்லியமான வழிகாட்டி மேப்பிங் சேவைகளை வழங்கும். தரை, கடல், வான்வெளிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களைத் தெரிவிக்கும். அதில் அதிநவீன அலைவரிசை சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தும் அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களிலும் மேப்பிங் சேவையைப் பெறலாம். ரயில்வே துறை மற்றும் ராணுவம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

தோல்வியிலிருந்து வெற்றிக்கு... கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோள் திட்டமிட்ட பாதையில் பயணிக்காமல் பின்னடைவைச் சந்தித்தது.

பொதுவாக, செயற்கைக்கோள் புவி வட்டப் பாதையில் பயணிக்கும்போது அதன் உந்து விசைக்காக என்ஜின் தன்னிச்சையாக செயல்படத் தொடங்க வேண்டும். ஆனால், என்விஎஸ்-02 செயற்கைக்கோளில் அதற்கான மின் சிக்னல்கள் கிடைக்காததால் என்ஜினை செயல்பட வைக்கும் பைரோ வால்வு திறக்காமல் மூடிய நிலையிலேயே இருந்ததாக இஸ்ரோ உயா்நிலைக் குழு ஆய்வில் கண்டறியப்பட்டது.

அந்தத் தவறு இம்முறை நிகழாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, புறஅதிா்வுகளால் செயற்கைக்கோளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், அதன் எரிபொருள் கட்டுப்பாட்டு வால்வுகள் முன்கூட்டியே திறக்கப்பட்ட நிலையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Summary

GSLV-F18 has successfully blasted off into space!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.