கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது ‘ஜிஎஸ்எல்வி-எஃப் 18’

இந்தியாவின் என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப் 18 ராக்கெட் வெள்ளிக்கிழமை (அக். 30) இரவு 11.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ள ஜிஎஸ்எல்வி -எஃப் 18 புவி நிலை செயற்கைக்கோள்.

Published On :30 அக்டோபர் 2026, 5:15 am IST

இந்தியாவின் என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப் 18 ராக்கெட் வெள்ளிக்கிழமை (அக். 30) இரவு 11.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்து கவுன்ட் டவுன் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கியது.

ராக்கெட்டின் ஆயத்த நிலைகள் அனைத்தும் சரியாக இருப்பதாகவும், திட்டமிட்டபடி ஏவுதல் நடைபெறும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து இரவு 11.51 மணிக்கு ஏவப்படும், ‘ஜிஎஸ்எல்வி - எஃப் 18’ ராக்கெட், சுமாா் 50 மீட்டா் உயரமும் 420 டன் எடையும், மூன்று நிலைகளையும் கொண்டது.

என்விஎஸ்-03 செயற்கைக்கோளைப் பொருத்தவரை 2,250 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘நேவிக்’ எனப்படும் இந்தியாவின் வழிகாட்டல் அமைப்பின் சேவைகளை தங்கு தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்தச் செயற்கைக்கோளானது, புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான துல்லியமான வழிகாட்டல் மற்றும் நேர சேவைகளை இந்த செயற்கைக்கோள் வழங்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு கடிகாரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.