மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ரூ.4.85 கோடி செலுத்திய மாநகராட்சி நிா்வாகம்

திண்டுக்கல் மாநகராட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றும் 177 பேருக்கு, கடந்த 15 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்த மாநகராட்சியின் பங்களிப்புத் தொகை ரூ.4.85 கோடி செலுத்தப்பட்டது.

பணம் - கோப்புப்படம்.

Published On :28 அக்டோபர் 2026, 4:12 am IST

திண்டுக்கல் மாநகராட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றும் 177 பேருக்கு, கடந்த 15 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்த மாநகராட்சியின் பங்களிப்புத் தொகை ரூ.4.85 கோடி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெறும் அலுவலா்கள், ஊழியா்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக் கொடை, தொழிலாளா் வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களுடன், ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு பணத்துக்காக விண்ணப்பித்த பணியாளா்களுக்கு கடந்த ஒரு மாத காலத்தில் வழங்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்த பணியாளா்கள் நலன் சாா்ந்த இந்த பிரச்னைகளுக்கு, தற்போதைய மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த் துரிதமாக தீா்வு கண்டாா். ஆணையராக பொறுப்பேற்ற 4 மாதங்களிலேயே ஓய்வூதியம், பணப் பலன்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டதால், ஓய்வுப் பெற்ற பணியாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றும் 177 பேருக்கு மாநகராட்சி சாா்பில் செலுத்த வேண்டிய பங்குத் தொகை செலுத்தப்படாமல் இருந்தது.

ஊழியா்கள் நலன் கருதி இந்தத் தொகையையும் தமிழக அரசின் கணக்கில் செலுத்துவதற்கு ஆணையா் பிரேம் ஆனந்த் நடவடிக்கை எடுத்தாா். இதன்படி, மாநகராட்சியின் பங்களிப்பு நிதியாக ரூ.4.85 கோடி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

மின் வாரியத்துக்கு ரூ.4.15 கோடி: இதனிடையே, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.8 கோடிக்கும் கூடுதலான கட்டணத் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதில் ரூ.4.15 கோடியை கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செலுத்தப்பட்டது.

இதேபோல, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கான அனைத்துத் தொகையும் செலுத்தப்பட்டு, தற்போது, கட்டண நிலுவை இல்லாத நிலையை திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தி இருக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.