தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை மாநகராட்சியில் 1,309 பயன்பாடற்ற மின்னணு பொருள்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சியில் புதிய முயற்சியாக வீடுகளில் பயன்படுத்த முடியாத மின்சாரத்தில் இயங்கும் பொருள்களை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 4:22 am IST

சென்னை மாநகராட்சியில் புதிய முயற்சியாக வீடுகளில் பயன்படுத்த முடியாத மின்சாரத்தில் இயங்கும் பொருள்களை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் 1,309 பொருள்கள் தூய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் தினமும் சுமார் 6,500 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், மண்டலம் வாரியாக உரம், எரிவாயு தயாரிப்பு மையங்களுக்கும் உலர்கழிவுகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

மேலும், வீட்டு உபயோகப் பொருள்களான மெத்தை, கட்டில் உள்ளிட்டவை பயன்பாடற்ற நிலையில், நீர் நிலைகளிலும், சாலையோரங்களிலும் வீசப்பட்டு வந்தன.

அதைத் தடுக்க 2025}ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன் மக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கும் தகவல் அடிப்படையில் வாரந்தோறும் வீடுகளுக்கு சென்று மெத்தை உள்ளிட்ட பயன்பாடற்ற உபயோகப் பொருள்கள் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அதற்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வீடுகளில் பயன்பாடற்ற மின்விசிறி, கணினிகள் உள்ளிட்ட மின்சாரப் பொருள்களை குப்பைகளுடன் சேர்த்து தொட்டிகளில் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், குப்பைகளைத் தரம் பிரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், மின்னணு பொருள் குப்பைகளை உரிய முறையில் சேகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதையடுத்து, தற்போது ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மக்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில் பயன்பாடற்ற மின்சார சாதனங்கள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை தூய்மைப் பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று மின்சாதனப் பொருள்களை சேகரித்துள்ளனர். மின்சாதனக் கழிவுகளான 3 பழைய கைபேசிகள், 38 கணினிகள், 11 மடிக்கணினிகள், 82 விசைப்பலகைகள், 361 தொலைக்காட்சி பெட்டிகள், 34 மின்விசிறிகள், 780 இதர மின்னணுச் சாதனங்கள் என மொத்தம் 1,309 பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அவை விதிமுறைப்படி மறுசுழற்சி நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.