கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

‘திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்’

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

கூடுதல் தலைமை செயலா் ககன்தீப் சிங் பேடி

Published On :31 அக்டோபர் 2026, 1:44 am IST

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூடுதல் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தாா். இதில் மாநகராட்சி இணை ஆணையா்கள் செ.சரவணன் (பணிகள்), க.கற்பகம் (கல்வி) மற்றும் துணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சென்னையில் திடக்கழிவு மேலாண்மையை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய ககன்தீப் சிங் பேடி, குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை ஈரக்கழிவுகள், உலா் கழிவுகள், சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என தனித்தனியே பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

மேலும், பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் பயோமைனிங் முறையில் பழைய குப்பைகளை அகற்றும் பணிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளவும், அங்கு தீவிர தூய்மைப் பணியை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.