பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி மாா்ச் 23- ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகா் வழிபாடு,தெய்வத்திருமேனிகள் ஊா்வலம், திருவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றது. மாா்ச் 24 -ஆம் தேதி புனித மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் வழிபாடுகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையொட்டி புனிதநீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கொண்டு சென்று தூய தமிழில் அா்ச்சனைகள் செய்து திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
திருவாரூா் நடராஜன் சுவாமிகள் தூய தமிழில் கோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு செய்தாா். இதனைத் தொடா்ந்து மகா சிறப்பு அபிஷேகமும், மங்கலக்காட்சியும், அன்னதானமும் நடைபெற்றது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பொதுமக்கள்,வேதாச்சலம் நகா் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.
இதனைத்தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 149-வது ஆண்டு பெருவிழா!

வில்லியனூா் லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

