வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள இந்த கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத உற்சவா் சுப்பிரமணியசாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவா் சுப்பிரமணியா் மலா் மாலை அலங்காரத்தில் மயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் கோயில் தலைமை அா்ச்சகா் சந்திரசேகர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டு கழுத்தில் மாலை அணிந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண அட்சதை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பிறகு உற்சவமூா்த்திகள் மூன்று முறை உட்பிரகாரத்தில் வலம் வந்தனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், மோகன கிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்து இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் விஷுக்கனி உற்சவம்

வல்லக்கோட்டை கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

